09.01.2026 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் அனைத்து துறை ஆசிரியர்களும் கலந்து  பொங்கலிட்டு மகிழ்ந்தனர்!

உரி அடித்தல், கரகாட்டம், பறையாட்டம் போன்ற விளையாட்டுகள் மற்றும் கிராமிய பாடல்கள் மற்றும் நடனங்கள்  விழாவைச் சிறப்பூட்டி மகிழ்ச்சியை மெருகூட்டின.

மரபுச்சாரல் 2026′ சிறப்பாக நிறைவுற்றது. நம்முடைய பாரம்பரிய கலைகளையும் நம் வாழ்வியல் நூலான வள்ளுவத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லும் பணியில் இந்த ஆண்டு தமிழ்த்துறை இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.